News
ஜனாதிபதி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை 20 ரூபாவால் உயர்த்தி முதலாளிமார்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார நேற்று அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து கடுமையான தொணியில் பேசி அவர்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக கூறினார்.
நெல்லை பதுக்கி வைத்துள்ள பாரிய அரிசி ஆலைகள் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் 210 ரூபாவாக இருந்த நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை 230 ரூபாவாக உயர்த்தி முதலாளிமார்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக கூறினார்.

