இலங்கை இறக்குமதியாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை அன்மித்தது.

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல இறக்குமதியாளர்களால் சிறிய துறைமுகங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி 13 டிசம்பர் 2024க்கு முன்னர் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ள மேலும் 20,000 மெற்றிக் தொன் அரிசியும் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அரிசி இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ள இறக்குமதி அரிசியை அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த இறக்குமதியாளர்கள், அவற்றை உடனடியாக அனுமதித்து உள்ளூர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பில் நாட்டு அரிசி உட்பட பல்வேறு வகையான அரிசிகள் உள்ளடங்குவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

