“தற்போது சொல்லுவதனை தேர்தல் காலங்களிலும் சொல்லியிருந்தால் நம்பிக்கை வளர்ந்திருக்கும்”

“NPP அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களே குறுகிய காலத்திற்குள் ஏன் விமர்சிக்கிறார்கள்?”
2/3 பெரும்பாண்மையைக் கூட எதிர்பார்த்திராரத சந்தர்ப்பத்தில் NPP க்கு மக்கள் அறுதிப்பெரும்பாண்மையையும் பெற்றுக்கொடுத்து மிகையான அதிகாரங்களையும் வழங்கினார்கள்.
அந்தளவிற்கு NPP அரசாங்கம் தேர்தல்காலத்தில் ஆக்ரோஷமான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நம்பிக்கையூட்டினார்கள்.
1.மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களின் பின்னர்தான் குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
2.எரிபொருளின் விலையை அவசரமாக குறைக்க முடியாது என்று தேர்தல் காலத்தில் கூறியிருக்க வேண்டும்.
3. IMF கடன் ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட முடியாது என்று தேர்தல் காலத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
4. அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்த முடியாது என்று.
5. சம்பள உயர்வு தொடர்பான விடயங்கள்.
6.பயங்கர வாத சட்டத்தை இல்லாதொழிக்க மாட்டோம்.
இவ்வாறு இன்னும் பல விடயங்களை அடிக்கிக் கொண்டே செல்லலாம். அவ்வாறெனில் மேலுள்ள வாக்குறிதிகள் வெறுமனே வாக்குகளை பெறுவதற்காகவா? என்ற வலுவான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதனால் தற்போதய மக்களின் எதிர்பார்ப்பு தேர்தல் காலத்தில் எதை சொன்னீர்களோ அதனை செய்து நிரூபியுங்கள் என்பதனையே மக்கள் முன்வைக்கின்றனர்.
NPP யின் தேர்தல் வாக்குறுதிகளில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் இரண்டினையும் அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டிருந்த காலத்தில் கூட முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை NPP யானது தேர்தலுக்கு முன்பும் பின்பும் என்று இரட்டை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்ததை அப்போதும் சுட்டிக்காட்டிருந்தோம். (உதாரணமாக PTA, IMF கடன் மறுசீரமைப்பு, 13வது திருத்தம்)
அதேபோன்று NPP அரசாங்கத்திலுள்ள பெரும்பாண்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக சிறுபாண்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு தூரம் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்ற வினாவும் எமக்குள் எழுகின்றது.
ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் தனது பதவியேற்பு உரையில் எம்மை ஆதரித்த, ஆதரிக்காத மக்களுக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும் என்று குறிப்பிட்டதானது இத்தேர்தலில் NPP க்கு வாக்களித்தவர்களாகிய எம்மைப் போன்றவர்களுக்கு இன்னும் வலுவூட்டுகின்ற நம்பிக்கையாகவும் ஆருதலாகவும் இருந்தது. ஆனால் NPP யின் தொடரான அரசியல் வேலைத்திட்டங்களை அரசியல் பெறுமானத் தீர்மானங்கள் மூலம் அவதானித்து நாம் முடிவுகளை மேற்கொள்ள முயலுகின்ற போது எவ்வளவு தூரம் NPP தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதானது NPP க்கு வாக்களித்தவர்களுக்கிடையிலேயே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளமை கசப்பான உண்மையாகும்.
பூகோல அரசியலுடன் இணைந்த இலங்கை அரசியலானது ஆட்சியாளர்களின், ஆளப்படுவோரின் மனோநிலையில் இன்னும் பல மாற்றங்களுடன் பயணிக்க வேண்டிய காலமும் தேவையும் இருக்கிறது. இதனால் எமது ஒட்டுமொத்த அரசியலையும் NPP யில் கொண்டுபோய் உடனடியாக அடமானம் வைக்க முடியாது என்பதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்மாக செயற்பட வேண்டும் என்பதும் எமது தேர்தல்கால புரிதலாகவும், சுட்டிக்காட்டலாகவும் இருந்தது என்பதை இங்கு ஞாபகமூட்டவும் வேண்டும்.
ஏனென்றால் தற்போது NPP யாக வளரந்து வந்துள்ள JVP க்கு ஏன் இதற்கு முன்னர் இலங்கையின் அரசியலில் ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை? அல்லது தற்போது NPP யாக மக்கள் இணைந்து ஏன் செயற்படவிரும்பினார்கள்? என்ற வினாக்களுக்கான விடைகளை ஆரவாரமில்லாமல் அவதானித்து பின்பற்றும் வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இருப்பதாகவே நாம் உணருகின்றோம்.
-MLM.சுஹைல்-

