News
அரசியலமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டத்தை கொண்டுவந்து தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி ..
அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டத்தை வந்து தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தரும் முன்னாள் எம்பியுமான அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
தற்போதய சூழ்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் என்பது தேவையே இல்லாத விடயம் என கூறிய அவர் எதிர்வரும் வாரம் பாராளுமன்ற வாரத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி மக்களை வீதியில் இறக்கவைத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் முயற்சியே தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.