வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தின் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் ; மு.கா பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உறுதியாளித்தார்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தின் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் Dr. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு தேவைகளுடன் காணப்படும் மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
இன்று காலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜீ.ஆர். விஜித்கரன் தலைமையில் இச் சந்திப்பு இடம் பெற்றது.
தமது துறைமுக தேவை குறித்து மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைத்ததையடுத்து அது தொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வாழைச்சேனை துறைமுகத்துக்குற்பட்ட மீன் பிடி அமைப்புக்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் தேவை குறித்து கருத்துக்களை இதன் போது முன்வைத்தனர்.
இதன் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.