திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள்.
இர்ஸாத் இமாமுதீன்
லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (21) மாவனல்லை உயன்வத்தை மஸ்ஜிதுன் நூர் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவரும் லைபொண்ட் நிறுவனத்தின் பணிப்பாளருமாகிய அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லக்சிரி நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஷஹீமுல்லாஹ் இக்பால் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
லைப்பொண்ட் நிறுவனத்தின் வளவாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் இக்கற்கை நெறியை பூர்த்தி செய்து வெற்றிகரமாக சித்தியடைந்த மாணவிகள் குறித்து மதிப்பீட்டுரை நிகழ்த்தினார்.
அதேவேளை, லைப்பொண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் லைபொண்ட் நிறுவனம் பற்றிய அறிமுக உரை நிகழதினார்.
இந்நிகழ்வில் உயன்வத்த பள்ளிவாசல்கள் பரிபாலன சபைத்தலைவர்கள், பேஷ் இமாம்கள் மற்றும் கல்வியலாளர்கள், பிரமுகர்கள் உட்பட சித்தியடைந்த மாணவிகள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.