News
கோழிக்கறி சாப்பாடு ஆர்டர் செய்தவர்களுக்கு மாட்டிறைச்சிக் கறியுடன் வழங்கியதால் உணவகம் ஒன்றிலுள் ஏற்பட்ட மோதல் – ஐவர் காயமடைந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கி மோதலை கட்டுப்படுத்தினர்.

வெலிப்பன்ன களஞ்சியசாலை சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் , உணவக ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இதற்குக் காரணம், சம்பந்தப்பட்டவர்கள் ஆர்டர் செய்த கோழிக் கறிக்குப் பதிலாக, உணவக ஊழியர்கள் மாட்டிறைச்சி கறியை வழங்கியதே ..
இந்நிலையில் உணவக ஊழியர்கள் குறித்த வாடிக்கையாளர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வருகை தந்ததுடன், தாக்குதலில் காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு மத்துகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

