News

காலியில் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கணவன் ( லொக்கா 38 வயது) பலி – மனைவி படுகாயம்

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் 38 வயதான பெத்தும் என அழைக்கப்படும் “லொக்கா” என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்போது அவருடன் வந்த அவரது மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பதியினர் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button