News

பேருவளை சீனங்கோட்டையைச் சேர்ந்த இளம் இரத்தினக்கல் வியாபாரி யூசுப் அஷ்பாக்கை சில தினங்களாக காணவில்லை – தெரிந்தவர்கள் அறியத்தரவும்

பேருவளை சீனங்கோட்டையைச் சேர்ந்த இளம் இரத்தினக்கல் வியாபாரி யூசுப் அஷ்பாக் (25 வயது) காணாமல் போய் உள்ளார்.  இன்றுடன் காணாமல் போய் ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை இவர் தொடர்பில் எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. கடைசியாக டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி அழுத்கம பஸ் நிலையத்திற்கு அருகாமையில் நடமாடியிருக்கின்றார். உற்றார், உறவினர்கள் கடந்த ஐந்து நாட்களாக பலத்த தேடுதல்களை மேற்கொண்ட போதும் இதுவரை வெற்றி அளிக்கவில்லை.

இரத்தினக்கல் வியாபார கொடுக்கல் வாங்கல் ஒன்றில் ஏற்பட்ட மோசடி ஒன்றினால் மனம் உடைந்து காணாமல் போய் இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ள யூசுப் அஷ்பாக்கினை கண்டுபிடிப்பதற்கு குடும்பத்தினர் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர். யூசுப் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்குமிடத்து படத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். 

காணாமல் போன இளைஞன் மீண்டு வர உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button