News

உள்ளூராட்சி சபையின் வருமான உத்தியோகத்தரும், தொழிலாளியும் இணைந்து கோழிக்கடை ஒன்றில் கோழியை இலஞ்சமாக பெற்ற போது கைது

ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய சந்தேகநபர்கள் இருவர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடையின் அடுத்த வருடத்திற்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்த சந்தேகநபர்கள் 1,170 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்தே, முறைப்பாடு செய்த வர்த்தகரின் கடைக்கு முன்பாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மீரிகம உள்ளூராட்சி சபையின் வேவல்தெனிய உப காரியாலயத்தில் கடமையாற்றும் வருமான உத்தியோகத்தர் ஒருவரும், வீதிப் பிரிவில் கடமையாற்றும் தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



மேலும், சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button