இலங்கையில் காட்டுப்பன்றிகளுக்கு பேராபத்து !

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இலங்கையில் காட்டுப் பன்றிகள் அழிந்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தற்போதய கணிப்பின் படி , சுமார் 100க்கும் அதிகமான பன்றிகள் ஏற்கனவே உயிரிழந்துள் என்று அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இந்த நோய் ஏற்கனவே பன்றி இறைச்சி தொழிலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவின் பிளாக் 1 மற்றும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் மொனராகலை போன்ற நகர்ப்புற வனவிலங்கு பகுதிகளில் இந்த நோயினால் ஏற்படும் காட்டுப்பன்றிகளின் மரணங்கள் முக்கியமாக காணப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் டாக்டர் தாரக பிரசாத் தெரிவித்தார்.
பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு ஏற்படும் சுவாச நோயாகும், இது வகை A இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படுகிறது, இது பன்றிகளில் காய்ச்சல் அடிக்கடி பரவுகிறது. பொதுவாக பன்றிகளில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் “ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

