News
அரிசி தட்டுப்பாடு காரணமாக சில்லறை கடைகளின் வருவாய் 40 % வீதத்தால் வீழ்ச்சி ..
சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தங்களின் வருமானமும் 40 சதவீதம் குறைந்துள்ளதாக சில்லரை கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அரிசி கிடைக்காததால், நுகர்வோர் வேறு பொருட்களை வாங்குவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தையில் அரிசி கிடைக்காததால், புத்தாண்டுக்கான பானைகளை வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்வதும் வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.