ஒரு வருடத்தினுள் உயர்தரத்தை நிறைவுசெய்யும் புதிய செயற்திட்டத்தை அறிமுகப்படுத்திய Serendib High School இல் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்
Serendib High School, 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, வலுவான கல்வித் தரத்துடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில், உயர் தர விஞ்ஞானப் பிரிவில் முன்னோடியாக இருந்து வரும் நாம், இப்போது கலை மற்றும் வணிகப் பாடத்திட்டங்களையும் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளோம்.
உயர்தர பரீட்சைக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்துவதற்கு சிறந்த பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்ட குழு எம்மிடம் காணப்படுகின்றது. மேலும் எம்மோடு இயங்கும் பல்கலைக்கழக மாணவர்களின் குழாம் (University students pool) மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.
உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்டு உயர்கல்வி கற்கைகளுக்குள் விரைவாக உட்புக உதவும் வகையில் ஒரு வருடத்தினுள் உயர்தரத்தை நிறைவுசெய்யும் புதிய செயற்திட்டத்தை நாம் கலை மற்றும் வணிகப் பாடப் பிரிவுகளில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இச்செயற்திட்டம் மாணவர்களுக்குக் உயர்தரக் கற்கைகளை குறைந்த காலத்திலேயே முடிக்கச் செய்வதோடு, அவர்களது எதிர்கால இலக்குகளையும் விரைவாக அடைந்துகொள்ள உதவுகிறது.
எங்கள் பாடசாலை அண்மைய உயர்தர பரீட்சைகளில் தொடர்ந்தும் சிறந்த முடிவுகளைப் பதிவு செய்துள்ளமையையும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தில் சாதனைகளை அடைந்துள்ளமையையும் நாங்கள் பெருமையுடன் அறிவித்துக்கொள்கின்றோம்.
வெளி மாணவர்கள் வசதியாக தங்கி, கவனச்சிதறலின்றி படிப்பை தொடர உதவும் அடிப்படையில், தரமான விடுதி வசதிகளும் எமது பாடசாலையில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரமான கல்வி, திறமையான ஆசிரியர்கள், மற்றும் முழுமையான கற்றல் சூழல் மூலம், நாம் மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பணியில் தொடர்ந்து செயற்பட்டு வருகிறோம்.
எனவே கலை, வணிக கற்கைகைகளில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்று உயர்தரப் பரீட்சைகளை விரைவாகவும் சிறப்பாகவும் வெற்றி கொள்ள எம்மோடு இணைந்து கொள்ளுமாறு Serendib High School உங்களை அழைக்கின்றது.
உங்கள் வளமான உயர்தர கல்விப் பயணத்தை எங்கள் பாடசாலையில் தொடங்குங்கள், உங்கள் எதிர்கால வெற்றிக்கான வழியை நாம் வகுப்போம்!
பதிவுகளுக்கு –
https://forms.gle/XC6regFCTJvDjwd19
மேலதிக விபரங்களுக்கு –
0760448391
0778448391