விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக விமர்சனம் ..
விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு நிகழ்வுகளின்போதே தேசியக் கொடி தவறான முறையில் ஏற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தேசியக் கொடியை இரண்டு வண்ணங்களுக்கு அருகில் கட்டி ஏற்றுவது வழக்கம் என்றும், ஆனால் இம்முறை சிங்கத்தின் வால் பக்கத்தில் கட்டி ஏற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான விரிவான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது தரப்பு கதிரை சின்னத்தில் பழைய கூட்டணியிலேயே போட்டியிடுவுள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.