News
இருசக்கர வண்டியொன்றில் வந்தவர்கள், முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவரை சுட்டுவிட்டு தப்பியோட்டம்.

அஹுங்கல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை காலி மாவட்டத்தின் அஹுங்கல்லை நகர மத்தியில் இன்று காலை 5:45 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இருசக்கர வண்டியொன்றில் வந்தவர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு காரணமாக முச்சக்கர வண்டிச் சாரதியொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நந்தசிறி டி சில்வா எனப்படும் காயமடைந்த நபர் அஹுங்கல்ல – போகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் இவர் அப்பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ஆவார் .
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



