News

நான் நிரபராதி ; டயானா கமகே

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது பிரதிவாதியான டயானா கமகே, தான் மீதான குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என்று கூறினார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர், இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்ட ஆவணம் 2003 இல் தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த வழக்கு 2024 இல் தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வழக்கறிஞர், 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், தொடர்புடைய ஆவணம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிபதி வழக்கை மார்ச் 5 ஆம் திகதி விசாரிக்க   உத்தரவிட்டார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button