கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சங்கு பொலிஸாரால் கைது

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரரான சங்கு எனப்படும் சவித்ர டி சில்வா, கல்கிசை பொலிஸாரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ரத்மலானையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சங்கு என்ற நபர் ஒருவரைத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர், தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குடு அஞ்சு மற்றும் ஆல்டோ தர்மாவின் நெருங்கிய கூட்டாளி என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு உள்ளான நபர், இந்திக சுரங்க சொய்சா அல்லது ரத்மலானே சுத்தா மற்றும் மற்றொரு குழுவுடன் தாக்குதல் நடந்த இடத்திற்குத் திரும்பி வந்து தனஞ்சய டி சில்வாவின் சகோதரரைத் தாக்கியுள்ளனர். மோதலின் போது, ஒரு குறிப்பிட்ட நபர் தனஞ்சயவின் சகோதரனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் காயங்களுடன் தனது வீட்டிற்குள் சென்று, கூர்மையான ஆயுதத்தை எடுத்து ரத்மலான சுத்தாவையும் மற்றொரு நபரையும் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இரு குழுக்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா என்கிற சங்கு, அவரது தாக்குதலில் காயமடைந்த ரத்மலான சுத்தா மற்றும் மற்றொரு நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

