News

#புத்தளம் தொலைபேசியில் நிதி மோசடி: அறுவர் கைது

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகள் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தை பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் சனிக்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

அந்த முறைப்பாடுகளுக்கு அமைய, புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புத்தளம் ,பாலாவி மற்றும் கரம்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் பணம் 6 கையடக்கத் தொலைபேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Back to top button