News

கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் (முஸ்லிம்) மாணவியை கடத்திய சம்பவம் பதிவு ..

கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சனிக்கிழமை (11) அன்று பகிரப்பட்டுள்ளது.

அதிலொரு மாணவி தப்பிச் சென்றுள்ளார். எனினும், வாகனத்துக்குள் இழுத்து போடப்பட்ட மாணவியை காப்பாற்றும் முயற்சியில் இவ்வீதியில் சென்றவர் முயற்சித்துள்ளமை அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.

அவ்விரு மாணவிகளும் வீதியோரத்தில் நடந்து வந்துகொண்டிருந்த போது கறுப்பு நிற வாகனமொன்று அம்மாணவிகளை நோக்கி பயணித்துள்ளது.

அவ்விரு மாணவிகளும் வாகனத்துக்கு அருகில் வந்ததும் பக்க கதவை திறந்த ஒருவர், அதிலொரு மாணவியை இழுந்து வாகனத்துக்குள் தள்ளியுள்ளார்.

மற்றைய மாணவி, தன்னுடைய புத்தக பையை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, தாங்கள் வந்த பக்கத்துக்கு ஓடிவிட்டார். அந்த வாகனமும் அதே திசையில் பயணித்துள்ளமை வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன.TM

Recent Articles

Back to top button