News
இதுவரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை மீளாய்வு செய்யாமல் அதே மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானம்

இதுவரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை மீளாய்வு செய்யாமல் அதே மட்டத்தில் பேணுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பெற்றோல் லீற்றருக்கு 72 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு 57 ரூபாவும், ஆட்டோ டீசல் லீற்றருக்கு 50 ரூபாவும் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் தொடரும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.CN

