News
அண்மைய (கூட்டுறவுச் சங்க) தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடைவு

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அங்குனகொலபெல்லெஸ்ஸ சபையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழுமையாக 9 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதுடன், NPP ஆதரவு குழு எந்த ஆசனத்தையும் பெறவில்லை.
எவ்வாறாயினும், மஹரவில் கூட்டுறவுச் சங்கத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 89 ஆசனங்களைப் பெற்று NPP வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

