News
தெதுறு ஓயாவில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்தது

தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போனவர்களில் கடைசி இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கொபெய்கனே, குரட்டியகஹமுல்ல பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கடவத்த பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனேயிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், மொத்தமாக 15 பேர் கொண்ட குழுவினர் தெதுறு ஓயாவுக்கு சென்றபோது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



