News
மின் கட்டணத்தை 20% – 30 % வீதமாக குறைக்குமாறு கோரிக்கை ..

மின் கட்டணத்தை இருபது முதல் முப்பத்தேழு சதவீதம் வரை குறைக்க வேண்டும் என மின் நுகர்வோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை கருத்திற்கொண்டு வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கான இறுதித் தீர்மானத்தை இந்த வார இறுதிக்குள் அறிவிக்க ஆணைக்குழு தயாராகி வருகிறது.



