News
இலங்கை வரலாற்றில் அதிகூடிய தொகையாக 2 ஆயிரத்து 883 இலட்சம் ரூபா போதைப்பொருள் கடத்தல் பணத்தை நேற்று கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அதிகூடிய தொகை நேற்று (16) கைப்பற்றப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் 2 ஆயிரத்து 883 இலட்சம் ரூபா (283 மில்லியன்) பணத்தை கைப்பற்றியதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் குருநாகல் நீதிமன்றம் இன்று (17) அறிவித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பணம் சிறையிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் ஒரு கடத்தல்காரனுடையது என போலீசார் தெரிவித்தனர்

