News
மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை ; ஜனாதிபதி சூளுரை

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அனுர குமார குறிப்பிட்டார்.
கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
தமது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அருவடை செய்யும் முதலாவது பெரும்போகம் இதுவாகும்.எவராவது நெல்லை களஞ்சியப்படுத்துவதாக இருந்தால் வாரா வாரம் இருப்பை அறிவிக்க வேண்டும்.
விரைவில் வர்த்தமானி மூலம் இதனை அறிவிப்போம் என கூறிய ஜனாதிபதி மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

