News

ஐக்கிய தேசியக் கட்சி எமது அழைப்பை நிராகரித்து விட்டது…. மேலும் நாட்டில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு பாரிய மோசடி தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி வெளிப்படுத்துவேன் ; எஸ்.எம். மரிக்கார்

இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மற்றுமொரு பாரிய மோசடி தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி நடைபெறவுள்ள மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்திருந்த போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி குறித்து கருத்து தெரிவித்த அவர், இதில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த அழைப்பை நிராகரித்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button