News

திருகோணாமலை குச்சவெளி பாடசாலையில் ஹக்குல் முபீன் ஆசிரியருக்கு நடந்த அநீதி ; ஒரு வருட காலமாக இழுபறியில் உள்ள விசாரணை!!!

ஏ.கே.ஹக்குல் முபீன்
(தி/தி/இலந்தைக்குளம் அ. மு. க. பா.)
காசிம் நகர்
குச்சவெளி

தகுந்த காரணமற்ற இடமாற்றம் மற்றும் மேன்முறையீட்டை அலட்சியம் செய்தமை சம்பந்தமாக

மேற்படி எனக்கு திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் 2024.01.26 ந் தகதிய T/ZEO/ADM/SLTS/1439 ம் இலக்க இடமாற்ற கடிதம்  08.02.2024 ந் திகதி அதிபர் மூலமாக கிடைக்கப்பெற்றேன்.

எனினும், அந்த இடமாற்றம் எது வித காரணமும் இன்றி எனக்கு வழங்கப்பட்டிருந்ததால் மேற்படி இட மாற்றத்தை மீழ் பரிசீலனை செய்து உதவுமாறு கூறி திருகோணமலை வலய கல்விப்பணிப்பாளர் ரீ. ரவி சேர் அவர்களுக்கு எழுத்து மூலம் மேன் முறையீடு செய்தேன். எனினும் இன்றைய தினம் (2024.10.21)வரை அதற்கு எது வித பதிலும் எனக்கு கிடைக்கவில்லை; என்பதை மிகவும் கவலையோடு தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருவதோடு;
மேலும்,

1) பாடசாலை செல்லும் வயதில் ஏழு குழந்தைகள் உள்ளமை,

2) கடந்த சுமார் 28 ஆண்டுகள், கஷ்ட, அதிகஸ்டப் பிரதேசங்களில் பணியாற்றியமை,

3) எதுவித தக்க காரணமும் இன்றி “சமப்படுத்தல்” என்ற பெயரில் இடமாற்றம் வழங்கியமை.

4) எனக்கு இடமாற்றம் தரும் போது அதே பாடசாலையில் தரம் 3 மற்றும் தரம் 4 ஆகிய வகுப்புகள் ஆசிரியர் இல்லாத நிலையில் காணப்பட்டமை .

5) இன்று வரை ஆசிரியர்கள் இல்லாத வகுப்புகளுக்கு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை.

6) என்னால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு இதுவரை காலமும் எது வித பதிலும் தராமை,

7) மேன் முறையீட்டுக்கு பதில் தராததோடு எதுவித முன் அறிவித்தலும் இன்றி எனது சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளமை,

8) மாற்றீடாக எனக்கு வேறு பாடசாலையேனும் தற்காலிகமாக வழங்கி எனது பிரச்சினையை தீர்ப்பதற்கு எது வித தகுந்த நடவடிக்கையும் எடுக்காமை,

9) சுமார் 9 தடவைகள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு என்னை வருமாறு கூறி என்னை அலட்சியம் செய்தமை,

10) ஓர் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ள எந்த ஒரு சிறிய விதிமுறையும் பின்பற்றப்படாமல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை

11) இவை அனைத்துக்கும் மேலாக தற்போதைய பொருளாதார சிரமமான இந்த காலத்தில் பாடசாலை செல்லும் வயதுள்ள ஏழு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை பல்வேறு வகையிலும் நிர்க்கதி ஆக்கி அலட்சியம் செய்து மிகப்பெரிய ஒரு வாழ்வாதார சிக்கலை ஏற்படுத்தியமை,

ஆகிய பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்படி எனக்கு திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களிடமிருந்து எனக்கு தகுந்த நீதி கிடைக்க ஆவண செய்து உதவுமாறு மேற்படி தங்களை மிகவும் பணிவாகவும் தாழ்மையுடன் கவலையோடும் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

Recent Articles

Back to top button