News

20 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்யுமாறு யோசனை முன்வைக்கப்ப

200 மில்லியன் தேங்காய்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கான யோசனையொன்று அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தேங்காய் உற்பத்தித்திறன் சுமார் 200 மில்லியன் குறையும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கத்திடம் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சபையின் தலைவர் திரு.ஜெயந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

தேங்காய் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தேங்காய் கையிருப்புகளை உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் நாடு சுமார் ஒரு பில்லியன் டாலர் வருமானத்தை இழக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டால் நுகர்வோர் ஒரு

தேங்காயை சுமார் 140 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button