News

சுங்கப் பணிப்பாளருக்கு எதிராக சுங்க தொழிற்சங்க கூட்டணி போர்க் கொடி !!

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பிபிஎஸ்சி நோனிஸ் கலந்துகொள்ளும் எந்தவொரு உத்தியோகபூர்வ கடமைகளிலோ அல்லது கூட்டத்திலோ பங்குபற்றுபற்றுவதில்லை என சுங்க தொழிற்சங்க கூட்டணியின் உறுப்பினர்கள் தீர்மானித்ததாக சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (22) தெரிவித்தார்.

சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று காலை அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும், சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் நடவடிக்கையுடன் தாம் உடன்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகத்தை நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தற்போதைய சுங்கப் பணிப்பாளர் தொடர்ந்தும் பணிபுரிந்தால் சுங்க நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button