News

இந்த அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் ; அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் நிலைமை இருப்பதால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன, தனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவுமே தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை அல்ல என்றார்.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், வடக்கிற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனக்குப் பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் பாராளுமன்றத்தில் ஏன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை குறிப்பிட்டு, NPP அரசாங்கத்தை ஒரு கொலைகார அரசாங்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button