News
யாழில் Ai மூலம் ஆசிரியர்களின் புகைப்படங்களை தகாத முறையில் எடிட் செய்து பரப்பிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியல்

யாழ், காங்கேசன்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை நிர்வாகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் கிளிநொச்சி நீதிவான் முன்பு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



