News
சவுதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

சவுதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இலங்கைக்கான சவூதி தூதுவர் காலிட் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் இலங்கையின் மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி முன்னிலையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ரிஷாத் பத்தியுதீன், ஹாபிஸ் நசீர் அஹ்மட் மற்றும் அரச அதிகாரிகள், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டதாக சவூதி தூதரகம் தெரிவித்துள்ளது.

