கொள்கலன் விடயத்தில் மேல்மாகாண ஆளுநர் தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் யூசுப் அவர்களை இனவாத அரசியல்வாதிகளும் அவர்கள் சார் ஊடகங்களும் குறிவைப்பதை நிறுத்த வேண்டும்.

கொள்கலன் விடயத்தில் மேல்மாகாண ஆளுநர் தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் யூசுப் அவர்களை இனவாத அரசியல்வாதிகளும் அவர்கள் சார் ஊடகங்களும் குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி இலங்கை உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மஹிந்தவுடன் இருந்து கொண்டு இனவாதத்தை கக்கிய அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் இப்போது மேல் மாகாண ஆளுனரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மீண்டும் நாட்டை குழப்ப முனைகின்றனர். இதில் இனவாதி
விமல் வீரவன்ச போன்றோர் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
கொள்கலன் விடயத்தில் மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் மிக தெளிவாக தன் சார்பு அறிக்கை வெளியிட்டும் அதனை கொச்சைபடுத்த முனைவதை ஏற்க முடியாது.
ஜனாதிபதி அநுரகுமார நாட்டை பொறுப்பேற்றது முதல் இனவாதத்துக்கு இடமில்லாத நாடாக இந்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. சகல இன மக்களும் இலங்கையர் என்ற ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் இந்நேரத்தில் இவ்வாறு இனரீதியாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன் வைப்பதை விமல் வீரவன்ச போன்ற தவிர்க்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.



