News
கடந்த அரசாங்கம் உப்பை சேமித்து வைக்காத காரணத்தினால் வெளிநாட்டிலிருந்து உப்பை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் இலங்கைக்கு உப்பை இறக்குமதி செய்ய நேர்ந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மோசமான காலநிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஆனால் முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இருப்புக்களை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அந்தத் தயாரிப்பு இல்லாததால்,தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

