கண்டி மீரமக்காம் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபை, கண்டி சிட்டி மஸ்ஜித் சம்மேளனம், கண்டி சிட்டி ஜமியதுல் உலமா ஒன்றினைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின விழா
கண்டி மீரமக்காம் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபை, கண்டி சிட்டி மஸ்ஜித் சம்மேளனம், கண்டி சிட்டி ஜமியதுல் உலமா ஒன்றினைந்து வருடா வருடம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் சுதந்திர தின விழா இம்முறையும் 77 வது சுதந்திர தின விழாவை கண்டி மீராமக்காம் பள்ளிவாயல் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி கலந்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள். மேலும் இவ்விழாவில் கெளரவ உலமாக்கள், கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர், முன்னாள் கண்டி மாநகர மேயர், துனை மேயர், முன்னாள் மாகண சபை உறுப்பினர்கள், முன்னாள் கண்டி மாவட்ட செயலாளர், துனை செயலாளர், கண்டி மாநகர ஆணையாளர், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், சிங்கள வர்த்தக சங்கம், தமிழ் வர்த்தக சங்கம், கண்டி சிட்டி மஸ்ஜித் சம்மேளனம், கண்டி மாவட்ட முப்படைகளின் தலைமை அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் உற்பட அழைப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.