நுட்பமான முறையில் உற்பத்தி திகதியை மாற்றி, விற்பனைக்கு அனுப்புவதற்கு வைத்திருந்த பேரீச்சம்பழங்கள் சிக்கின

புறக்கோட்டைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, உற்பத்தி திகதியை மாற்றி, விற்பனைக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட காலாவதியான ஒருதொகை பேரீச்சம்பழங்களை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அதிகாரிகள் இன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
220 கிலோ கிராம் பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வர்த்தகருக்கு மீது வழக்குத் தொடரப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பேரீச்சம்பழங்களின் திகதிகளை மிகவும் நுட்பமான முறையில் மாற்றுவதன் மூலம் இந்த மோசடி வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது அந்த இடத்திலிருந்த ஒருவர் காலாவதியான பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு, அவை ஒரு பிரச்சினையல்ல என்பதைக் காட்டியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடைக்கு எதிராக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

