News
தேர்த்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி ..

ஊடகவியலாளராக பணியாற்றிய மஹிந்த ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கத்தினால் தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் திரு.சுனந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் கியூபாவுக்கான தூதுவராக மஹிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கில் குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.
மஹிந்த ரத்நாயக்க கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
முன்னதாக, இராஜதந்திர சேவைக்கு அரசியல் நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களை நியமித்தது குறித்து தேசிய மக்கள் சக்தி கடும் விமர்சனங்களை வெளியிட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமது செயற்பாடுகளுக்கு தூதுவர் சேவை சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.CN



