News

சுமங்க வித்தியாலய காணியை மீளவும் ஒப்படைக்காவிடின் பிரச்சினை ஏற்படும்

எம்.ஆர்.எம்.வசீம்

தெஹி­வளை சுமங்க வித்­தி­யா­லயம் அமைந்­தி­ருக்கும் இடம் இற்­றைக்கு 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரம விஞ்­ஞா­னாதி பெளத்த நிறு­வ­னத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காணி­யாகும். ஆனால் தற்­போது இதனை முஸ்லிம் பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல கடந்த அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ளது. அதனால் இந்த அர­சாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறு­வ­னத்­துக்கு மீள ஒப்­ப­டைக்க வேண்டும். இல்­லா­விட்டால் இது ஒரு இனப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமையும் என சிங்­ஹல ராவய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தெஹி­வளை மீலாத் பாட­சா­லைக்கு முன்னால் நேற்று இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் கருத்து தெரிவிக்­கை­யி­லேயே தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், தெஹி­வளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் படிப்­ப­டி­யாக குடி­யேறி அங்கு காணி மற்றும் வியா­பார நிலை­யங்­களை வாங்­கி­யது மட்­டு­மல்­லாது தற்­போது பெளத்த நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான காணி­க­ளையும் பலாத்­கா­ர­மாக கைப்­பற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். உலகில் இருந்த பெளத்த நாடு­க­ளுக்கும் இதுதான் நடந்­தது. இந்­தோ­னே­சியா, மலே­சியா, ஈரான், ஈராக், ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடுகள் ஆரம்­பத்தில் பெளத்த நாடு­க­ளாகும். இலங்கை பெளத்த நாடாக பிக்­கு­க­ளுடன் ஒன்­றாக இணைந்து இருந்­ததால் இந்த இனத்தை அழிப்­ப­தற்கு யாருக்கும் முடி­ய­வில்லை.

இலங்­கையில் எமது காணி­களை உரித்­தாக்­கிக்­கொண்­டுள்­ளனர். எமது கல்­வியை எடுத்­துக்­கொண்­டுள்­ளனர். அதில் பிர­ச்சினை இல்லை. மனி­தா­பி­மான முறையில் அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய வரப்­பி­ர­சா­தங்கள் அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்டும். பெளத்­தர்கள் என்­ற­வ­கையில் நாங்கள் மற்­ற­வர்­க­ளுக்கு இரக்கம் காட்டும் இன­மாகும். இவ்­வாறு செயற்­படும் இனத்­துக்கு சொந்­த­மான காணி­களை பலாத்­கா­ர­மாக பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்­பது தவ­றாகும். எமது அதி­கா­ரி­களை பிடித்­துக்­கொண்டு காணி­களை விலைக்கு பெற்­றுக்­கொண்­டது மாத்­தி­ர­மல்­லாது தற்­போது பெளத்த அமைப்­பு­க­ளுக்கு உரித்­தான காணி­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

தெஹி­வளை சுமங்க வித்­தி­யா­லயம் என்­பது இற்­றைக்கு 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பெளத்த பரம விஞ்­ஞா­னாதி பெளத்த நிறு­வ­னத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாட­சா­லை­யாகும். பரம விஞ்­ஞா­னாதி பௌத்த நிறு­வ­னத்­துக்கு இதன் உரிமம் இருக்­கி­றது. இந்த பாட­சாலை தற்­போது மூடப்­பட்­டுள்­ளது. இதில் படித்த பழைய மாண­வர்கள் இருக்­கின்­றனர்.

ஆனால் இன்று இந்த பாட­சாலை மூடப்­பட்­டுள்­ளதால்.இதனை எமது கல்வி அதி­கா­ரிகள் முஸ்லிம் பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இது இனப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமைந்து விடும்.

இனத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எவ்­வாறு பாட­சா­லை­களை வழங்க முடியும். இது அரச அதி­கா­ரிகள் செய்யும் பாரிய குற்­ற­மாகும். முஸ்லிம் மாண­வர்கள் இந்த பாட­சா­லையில் இணைந்து படிப்பதாக இருந்தால் அது பிரச்சினையில்லை.

ஆனால் கடந்த அரசாங்கம் இந்த பாடசாலையை முஸ்லிம் பாடசாலையாக மாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இந்த அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுத்து பௌத்த மக்களுக்கு சொந்தமான இந்த இடத்தை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Recent Articles

Back to top button