News
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆச்சி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுகு்கு இடையில் 80 மில்லியன் ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையகப்படுத்தினார்கள், அதற்கான நிதி மூலம் என்ன என்பதை வெளியிடத் தவறியதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்

