News
பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அச்சமடைந்துள்ளனர்..

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாதாள உறுப்பினர்கள் அரசியல் பாதுகாப்பை இழந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அச்சமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் எம்.பி. தனியார் வானொலியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

