News

“பெண்கள் அரசியலில்” விழிப்புணர்வுக்காக இடம்பெற்ற வீதி நாடகம்

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின்  ஏற்பாட்டில், “பெண்கள் அரசியலில்” எனும் தலைப்பில் வீதி நாடகங்கள் இளைஞர் குழாத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

இளைஞர்களின் பங்களிப்புடன், பெண்களின் அரசியல் பங்குபற்றலின் அவசியத்தை மக்களிடையே விழிப்பூட்ட  இந்த நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன.

பழமையான பாரம்பரியச் சிந்தனைகள், பாலினத்திற்கிடையேயான சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து சிந்திக்க தூண்டும் வகையில் இவ்வீதி நாடகங்கள் அமைந்திருந்தன.

நாடகம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நாடகங்களை கவனித்ததோடு, பெண்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
பெண்கள் சமூகத்தில் முடிவெடுக்கும் அதிகார நிலையங்களில் பங்கேற்பதை உறுதிபடுத்த எதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Hasfar A Haleem BSW (Hons)
Journalist 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button