News
ஆட்சியாளர்களின் திறமை போதாது

சந்தேக நபர்களைக் கொன்று பாதாள உலகத்தை அடக்கப் போகின்றதா என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விளக்க வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
அரசின் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தால் இன்னும் முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களின் திறமை போதாது என்பதும், எதிர்க்கட்சியில் பணியாற்றுவதே அவர்களின் பயிற்சி என்பதும் இதற்கு முக்கிய காரணம் என நிர்மல் தேவசிறி குறிப்பிடுகிறார்.
இந்த குழுவினர் குறுகிய காலத்தை தவிர எதிர்க்கட்சியில் தொடர்ந்து பணியாற்றியதாக கூறிய அவர் , நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லாமை வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

