News
பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல !

பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல என பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.
முன்னாள் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கியதாக கூறிய அவர் ,
சொத்தி உபாலி , பொட்ட நௌபர் போன்ற பல பாதாள உலக தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலனாக உருவானதாகவும் அவர்கள் அரசியல் தயாரிப்பு எனவும் குறிப்பிட்டார்.
பழைய அரசியல் கலாசாரத்தினால் பாதாள உலக கோஷ்டி உருவானார்கள், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கலாசாரத்தில் அது இல்லாமல் போகும் என அவர் கூறினார்.

