News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது.. அத்துடன் ஹரிஷை தேர்தலில் களமிறங்க விடாமல் சதி செய்கிறது ;  சி.எஹியாகான்

பாறுக் ஷிஹான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைத்ததன் பின்னர் இன்று(23) மாலை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைத்ததன் பின்னர் இன்று(23) மாலை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்துள்ளேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும்இ பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார். ஆனால் இப்போதுள்ளவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காக இதனை பாவித்து வருகின்றனர். நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும், ஏமாற்றங்களையும் நேரடியாக சந்தித வளாக காணப்படுகின்றேன்  எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த எண்ணமுமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது .

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து நான்கு ஆண்டுகளாக சிந்தித்து கொண்டிருந்து இப்போது அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன். என்னுடைய பிரதிப்பொருளாளர் பதவி அடங்களாக கட்சியின் பதவிகளை இதுவரை துறக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் என்னை நீக்கிக்கொள்ளட்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் ஏ. சி.எஹியாகான் தெரிவித்தார்.



எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை  விட்டு விலகி  நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை அவர்களே தடுத்தார்கள். கடந்த பொதுத்தேர்தலிலும் தங்களின் ஆமாம் சாமிகள் அவர் கூட தேர்தலில் களமிறங்கினால் அவர்கள் தோற்று ஹரீஸ் வென்றுவிடுவார் என்பதற்காக ஹரிஷை தேர்தலில் களமிறங்க விடாமல் சதி செய்து தடுத்தார்கள். இந்த முஸ்லிம் காங்கிரஸில் யாரும் மக்களை பற்றி சிந்திக்க முடியாது. அவ்வாறு சிந்தித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயங்களில் ஒன்று சாய்ந்தமருதில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள அநேகமான கட்சிகள் மீது மக்கள் வெறுப்புற்றுள்ளதாகவும் மக்களது நலனுக்காக மக்களது வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் மனோ நிலையில் இருப்பதாகவும் அவ்வாறான நிலை மாறி நாட்டையும் மக்களையும் பற்றி யோசிக்க கூடிய சிறந்தவர்கள் தங்களது கட்சியின் பக்கம் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

சுசந்த புஞ்சிநிலமே  பிரதி அமைச்சராக இருந்த காலங்களில் இன மத வேறுபாடின்றி அனைத்து மக்களதும் நாட்டினதும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.எனவே நாட்டுப்பற்றுள்ள அனைத்து மக்களும் இன மத பேதமின்றி தங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு   ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button