News

கொட்டாஞ்சேனை கொலையின் பின்னணியில் அரசாங்க உறுப்பினர்…? குற்றச்சாட்டை மறுத்த அரசு

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆளும் கட்சி உறுப்பினருக்கு தொடர்பு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், அந்த அறிக்கையை மறுத்துள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அந்தத் தருணத்தில்தான் இவ்வாறான ஒரு அறிக்கை தொடர்பில் தனக்குத் தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டை வேறு எவரும் முன்வைக்கவில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூட இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதன் பின்னணியில் ஆளும் கட்சி உறுப்பினர் எவரும் இல்லை என தன்னால் உறுதியளிக்க முடியும் எனவும் ஏனையவர்கள் தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button