News

மஹிந்த ராஜபக்‌ஷவை விட்டு விட்டு அனைவரும் சென்றாலும் ரனிலுக்கு வாக்கு கிடைக்காது..

மஹிந்த ராஜபக்‌ஷவை விட்டு விட்டு அனைவரும் சென்றாலும் ரனில் விக்ரமசிங்கவுக்கு வாக்குகள் கிடைக்காது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

கட்சி காரியாலயத்தில் ஊடகவியலார்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

92 பேர் சென்றதாக பொய்யாக கணக்கு காட்டியுள்ளார்கள். அங்கே சென்றவர்கள் தான் இங்கேயும் இருக்கிறார்கள்.சென்றவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்‌ஷவின் புகைப்படத்தை காட்டி வாக்கு எடுத்தவர்கள் எல்லா உறுப்பினர்களும் சென்றாலும் வாக்குகள் கிடைக்காது.

புதிய வாக்களர்களின் வாக்குகள் 15 இலட்சத்தை பெறக்கூடிய வேட்பாளரையே இம்முறை பொதுஜன பெரமுன சார்ப்பில் களமிறக்குவதாகவும் அவரே வெற்றிபெறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button