News
அபிவிருத்தியில் இந்தியாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு நாட்டை இன்னும் 5 வருடங்களில் உருவாக்குவோம்..

அபிவிருத்தியில் இந்தியாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு நாட்டை இன்னும் 5 வருடங்களில் உருவாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷட பிரதி தவிசாளர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.
இன்று காலை சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,
தமது அணி ஊழல்களுடன் தொடர்புபடாத ஒரு பரிசுத்தமான அணி எனவும் அந்த அணி டீல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான ஒரு நாட்டை உருவாக்க பாடுபடும் என கூறினார்.

