News

எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரவு எட்டு மணிக்கு மூடுவதற்கு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம்..

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரவு எட்டு மணிக்கு மூடுவதற்கு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் ஆர்டர்களை இடைநிறுத்துவதுடன் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதன் இணைச் செயலாளர் திரு.கபில நாஒதுன்ன தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மூன்று சதவீத கமிஷன் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்னர் இருபத்தி நான்கு மணிநேர சேவையை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பு நேற்றும் இன்றும் தீர்ந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய இருப்பு எதுவும் ஆர்டர் செய்யப்படவில்லை என்றும், திங்கட்கிழமைக்குள் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button