ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து எந்தவித அறிக்கையும் விடாத ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இப்தார் நிகழ்வில் நான் பங்கேற்க மாட்டேன் ; நிசாம் காரியப்பர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில் பங்கேற்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதலை
கண்டித்து ஜனாதிபதி எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதுதவிர, ஆளுங் கட்சியை சேர்ந்த எவரும் கருத்து வெளியிடவில்லை.
ஈரான் மீது முதலில் அமெரிக்காவும், இஸ்ரேலுமே தாக்குதலை நடத்தியிருந்தது.
அத்துடன் ஈரானின் உயர்தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதற்கான இரங்கல் கூட தெரிவிக்கவில்லை
இந்த யுத்தத்திற்கு எவரும் ஆதரவு இல்லை.
அனைவரும் இதற்கு எதிர்ப்பினையே வெளியிடுகின்றனர்.
இந்த மோதல் நிலை கைவிடப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாளை இப்தார் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சியை அங்கத்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பகிஸ்கரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்



