News
கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிப்பு
பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸிலிருந்து பெலரசுக்கு செல்லும் பொது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இலங்கைக்கு கொண்டு வர பேச்சு நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை க்ளப் வசந்தவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் லொக்குபெட்டி எனப்படுபவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.